கடலின் அலைகளில் உன் அணைப்பு காண்கிறேன்
சூரியனின் வெளிச்சத்தில் உன் முகம் காண்கிறேன்
காற்றின் மொழிகளில் உன் அர்த்தங்களை காண்கிறேன்
ஆனால் ஏன், நீ மட்டும் காணவில்லை....
குயிலின் ஓசையில் உன் சிரிப்பை காண்கிறேன்
ஒவ்வோரு பாட்டிலும் நமது காதல் கதையை காண்கிறேன்
குழந்தையின் விளையாட்டில் உன் குறும்புகளை காண்கிறேன்
ஆனால் ஏன், நீ மட்டும் காணவில்லை....
துயரத்தில் உன் தேற்றுதல் காண்கிறேன்
அழும் போது உன் தோள்களை காண்கிறேன்
வாழ்க்கை எண்ணும் போது, உன் நெஞ்சம் காண்கிறேன்
ஆனால் ஏன், நீ மட்டும் காணவில்லை....
சென்றாய் நீ, நம் கனவை உடைத்துவிட்டு
சென்றாய் நீ, நம் உலகத்தை அழித்துவிட்டு
சென்றாய் நீ, என் மனதை கொன்றுவிட்டு
நான் இங்கு தான் இருக்கிறேன், ஆனால் ஏன், நீ மட்டும் காணவில்லை....
I would like to extend my most sincere thanks to Prasaanth R and Muthu R for their immense help in making this even more beautiful..
Comments
Post a Comment